வளர்ப்பு நாயை பறிமுதல் செய்து விற்ற அதிகாரிகள்: விநோத பின்னணி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரமொன்றில் ஒருவரின் வளர்ப்பு நாயைக் பறிமுதல் செய்த நகர அதிகாரிகள் அதை ஆன்லைனில் விற்ற சம்பவம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

குறிப்பிட்ட நபர் கடன் பெற்றிருந்த நிலையில், அதை திருப்பிச் செலுத்தாததால் அவரது வீல் சேரை எடுத்துச் செல்ல முயன்ற அதிகாரிகள் பின்னர் அவரது வளர்ப்பு நாயை பிடித்துச் சென்றுள்ளனர்.

Ahlen நகரில் இந்த விநோத நடவடிக்கையை எடுத்துள்ள அதிகாரிகள் மீது சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் குவிகின்றன.

ஆனால் தாங்கள் செய்தது சரிதான் என்று சொல்லும் அந்த அதிகாரிகள், அந்த வீட்டில் விலை மதிக்கத்தக்க பொருள் வேறு எதுவுமே கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

முதலில் அங்கிருந்த ஒரு வீல் சேரை பறிமுதல் செய்ய முயன்ற அதிகாரிகள் அது அந்த குடும்பத்திற்குரியது அல்ல என்று தெரியவந்ததும் அதை விட்டுவிட்டு அவர்களது வளர்ப்பு நாயைப் பிடித்துச் சென்றுள்ளனர்.

அந்த நாய் ஆன்லைனில் 750 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers