எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ள மூன்றாவது நபர்! தொடரும் மருத்துவ அற்புதம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

லண்டனைச் சேர்ந்த ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சையை அடுத்து அவர் எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ளது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் மூன்றாவதாக ஒரு நபரும் குணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்த முதல் நபர், பெர்லின் நோயாளி என்று அழைக்கப்படும் அமெரிக்கரான Timothy Ray Brown. அவரையடுத்து லண்டனைச் சேர்ந்த ஒருவர் எய்ட்ஸ் நோயிலிருந்து விடுதலை பெற்றுள்ளார்.

லண்டன் நோயாளியின் சிகிச்சையில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியினரான Dr Ravindra Gupta என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், Düsseldorf நோயாளி என்று அழைக்கப்படும் இன்னொரு ஜேர்மன் நபரும் எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் நான்கு மாதங்களுக்குமுன் தனது புற்றுநோய்க்காக ஸ்டெம் செல் சிகிச்சை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

லண்டன் நோயாளி எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட அதே மாநாட்டில்தான் இந்த மூன்றாவது நோயாளி குறித்த அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers