ஜேர்மனில் குழந்தைகள் ஆபாச தளத்தின் நிறுவனர்களுக்கு சிறை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் குழந்தைகள் ஆபாச தளத்தின் நிறுவனர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு பேர் குற்றவாளிகள் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகமாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

Elysium என்ற தளத்தில் உலகம் முழுவதும் இருந்து குழந்தைகளின் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட் நான்கு நபர்களில் 63 வயதான முதியவரும் அடங்குவார். இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2017 ஜூன் மாதம் இந்த வலைதளம் அதிகாரிகளால் மூடப்பட்டது. சுமார் 111,000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குகள் இந்த தளத்தில் இருந்துள்ளனர்.

ஜேர்மனியில் மிகப்பெரிய குழந்தைகள் ஆபாச படங்களை கொண்ட தளமாக இது இருந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers