சர்வதேச மகளிர் தினத்தன்று பெர்லின் மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சர்வதேச மகளிர் தினத்தன்று பெர்லின் மக்களுக்கு மட்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனிக்கும் மகளிர் தினத்துக்கும் பெரிய அளவில் தொடர்பிருந்தாலும் இந்த ஆண்டு முதல் முறையாக ஜேர்மன் தலைநகர் மக்களுக்கு மட்டும் பொது விடுமுறை அளித்து குஷிப்படுத்தியிருக்கிறது அரசு.

ஜனவரி மாத இறுதியில் நிகழ்த்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றிற்கு பிறகு பெர்லின் செனேட், மார்ச் 8ஐ பொது விடுமுறை தினமாக அறிவிக்க முடிவு செய்தது.

பெர்லினுக்கு மட்டுமே பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், 1990 வரை கிழக்கு மாகாணங்களில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தையொட்டி அரசு முறை விழாக்கள் கொண்டாடப்பட்டதை முந்தைய தலைமுறையினர் நினைவுகூறலாம்.

அது ஏனென்றால், கிழக்கு ஜேர்மனியின் சோவியத்தின் சேட்டிலைட் மாகாணத்தின் பண்டிகைகளில் மகளிர் தினமும் ஒன்று, அதனால் கிழக்கு பெர்லினில் பெரிய அணிவகுப்புகள் எல்லாம் நடப்பதுண்டு.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்