3 மணிநேரம் நடுக்கடலில் உயிருக்கு தத்தளித்த நபர்: ஹெலிகாப்டரில் வந்த வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வீடியோ

Report Print Vijay Amburore in ஜேர்மனி

நியூசிலாந்து கடலில் விழுந்த ஒரு இளைஞர் 3 மணிநேரமாக ஜீன்ஸ் பாண்ட் உதவியால் உயிருடன் மீட்கப்பட்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜேர்மனியை சேர்ந்த ஆர்னே முர்கே என்கிற 30 வயது இளைஞர் தன்னுடைய சகோதரருடன் நியூசிலாந்தில் உள்ள தொலாகா பே பகுதியில் உள்ள கடலில், பிற்பகல் நேரத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஆர்னே கடலில் தவறி விழுந்துள்ளார். இதனை கவனிக்காமல் நீண்ட தூரம் சென்ற அவருடைய சகோதரர் ரோவோ, நகராட்சி ஹெலிகாப்டர் மீட்பு சேவைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்திய மீட்பு படையினர், 3 மணிநேரத்திற்கு பின்னர், ஆர்னேவை பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து பேசிய ஆர்னே, தமது ஜீன்ஸ் பேன்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர்வாழும் கலையைக் கற்றிருந்ததாகவும், அதன்மூலம் தமது ஜீன்ஸ் பேன்டில் காலின் நுனி பாகங்கள் இரண்டையும் முடிச்சுப் போட்டு, அதில் நீர், காற்று ஆகியவற்றை நிரப்பி இடுப்பு பகுதி துணியை இறுக்கி மிதவையாக பயன்படுத்தி உயிர்தப்பியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்