ஜேர்மன் பிரபலங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் நாஜிக்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பாப் பாடகர்கள் என அனைவருக்கும் தொடர்ந்து நாஜி அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் வருகின்றன என புகார் எழுந்ததையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு வரும் மின்னஞ்சல்களில் தேசிய-சோசலிஸ்ட் தாக்குதல்", "NSU 2.0" அல்லது "வேஹர்மாக்ட்"என கையெழுத்திடப்பட்டுள்ளன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை நாஜிக்கள் அனுப்பியுள்ளனர்.

இடதுசாரி எம்.பி. மார்டினா ரென்னர் மற்றும் பாப் பாடகர் ஹெலேன் பிஷ்ஷர் ஆகியோர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

மின்னஞ்சல்களில் உள்ள மொழி ஒரே மாதிரியாக ஒத்துப்போகிறது. மேலும் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் இரண்டு நகரங்களில் விடுக்கப்பட்டுள்ளதால் பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

திங்களன்று லுபெக்கில் உள்ள முக்கிய இரயில் நிலையம் சோதனையிடப்பட்டன மற்றும் செவ்வாயன்று Gelsenkirchen ல் பொது நிதி அலுவலகங்கள் சோதனை செய்யப்பட்டன. ஆனால் குண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்