நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்: ஜேர்மனியர்கள் சொல்லும் 3 காரணங்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் YouGov நிறுவனம் நடத்திய ஆய்வில் 66 சதவிகித ஜேர்மனியர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மூன்று காரணிகள் குறித்து YouGov நிறுவனம் கேள்வி எழுப்பியது.

இதில, நல்ல ஆரோக்கியம் அவசியம் தேவை என 51 சதவிகிதம் பேரும், தங்களது வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான உறவை பின்பற்ற வேண்டும் என 32 சதவிகிதம் பேரும், 25 சதவிகிதம் பேர் பணம் போதுமானது என உணரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஐந்தில் ஒரு பகுதியினர், நல்ல வீட்டில் வசித்தாலும் மகிழ்ச்சி மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளனர். அதிக ஜேர்மனியர்கள் தங்கள் வாழ்க்கையில் போதுமானது கிடைத்துள்ளது என பதில் அளித்தாலும், 27 சதவிகிதம் பேர் தற்போதைக்கு நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மகிழ்ச்சியான வாழ்வுக்கான மிகப்பெரிய தடைகள், மோசமான உடல்நிலை மற்றும் போதுமான பணம் இல்லை என்று கணக்கெடுக்கப்பட்டது. ஒரு நல்ல உறவு இல்லாதிருந்தது என 8 சதவிகிதம் பேர், வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்