உலகமயமாக்கலுக்கு தேசியவாதம் சரியான பதில் அல்ல: ஜேர்மனி ஜனாதிபதி

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனி ஜனாதிபதி Frank-Walter Steinmeier, மீண்டும் தேசியவாதத்திற்கு திரும்புவது நாளை உலகிற்கு சரியான பதில் அல்ல என தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஜேர்மனியும், குரோஷியாவும் ஆறு மாதகால சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையாக செயல்பட உள்ளன.

இந்நிலையில், ஜேர்மனியின் ஜனாதிபதி Frank-Walter Steinmeier குரோஷியாவிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவர் மே 23-26ஆம் திகதி நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில், ஐரோப்பியாவின் வாக்குறுதிகளை புதுப்பிக்க பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஐரோப்பா முழுவதும் சமீப காலமாக தேசியவாத போக்கு நிலவுகிறது. இதுதொடர்பாக Frank-Walter Steinmeier கூறுகையில், ‘ஐரோப்பா ஒரே குரலில் பேச வேண்டிய தேவை இருக்கிறது.

தேசிய கூட்டை திரும்பப் பெறுவதாக சிலர் கனவு காண்பது, ஐரோப்பாவின் கடந்த காலத்திற்கான பதில் அல்ல. நமது எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு வழி பகிர்ந்துகொள்வது தான். ஜேர்மனி நாளை உலகில் ஒரு சிறிய நாடு ஆகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers