ஜேர்மனியில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்? 10 பேர் கைது, ஆயுதங்கள் பறிமுதல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் நேற்று நடத்தப்பட்ட ரெய்டுகளின்போது சந்தேகத்திற்கிடமான 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் மற்றும் ஒரு வாகனம் ஆகியவற்றின் உதவியால் எத்தனை பேரைக் கொல்ல முடியுமோ அத்தனை பேரைக் கொல்ல திட்டமிட்ட 10 பேர் ஃப்ராங்க்பர்ட்டில் நடத்தப்பட்ட பொலிஸ் ரெய்டுகளின்போது சிக்கியுள்ளனர்.

தென்மேற்கு ஜேர்மனியில் 200 பொலிசார் மெற்கொண்ட ரெய்டுகளின்போது, தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த, 20 முதல் 42 வயது வரையுள்ள 10 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் பொலிசாரிடம் சிக்கினர்.

சிக்கியவர்களில், ஃப்ராங்க்பர்ட்டுக்கருகிலுள்ள Offenbach என்ற நகரைச் சேர்ந்த ஒரு 21 வயதுள்ள நபரும் Wiesbaden நகரில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய 31 வயதுடைய சகோதரர்கள் இருவரும் முக்கிய குற்றவாளிகள் ஆவர்.

அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலோ கைது செய்யப்பட்ட மற்றவர்களைக் குறித்த வேறு எந்த தகவலோ இதுவரை வெளியிடப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் ஆயுத வியாபாரிகளுடன் தொடர்பு கொண்டதும், கன ரக வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் 20,000 யூரோக்கள் பணமும், ஏராளமான கத்திகளும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers