ஜேர்மன் போக்குவரத்து துறையின் மோசமான விளம்பரம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

தலையில் ஹெல்மெட் அணிவது குறித்து ஜேர்மன் போக்குவரத்து அமைச்சம் அளித்துள்ள விளம்பரம் மிகவும் முட்டாள்தனமாகவும், பாலியல் ரீதியாகவும் உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் அரைநிர்வாணமாக தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தபடி நின்றுகொண்டிருக்க, அதனுடன் வரும் ஸ்லோகனில் இது பார்ப்பதற்கு "வெட்கமாக இருந்தாலும் உயிரை காப்பாற்றுகிறது" என இடம்பெற்றுள்ளது.

பைக் பயணத்தின்போது ஹெல்மெட் அணியவேண்டும் என்ற இந்த விளம்பரம் பாலியல் ரீதியாக உள்ளது என பெண் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களது கொள்கைகளை இப்படி நிர்வாண ரீதியாக விற்பனை செய்வது பார்ப்பதற்கு சங்கடமாக உள்ளது. அதுமட்டுமின்றி இது முட்டாள்தனமாகவும், பாலியல் ரீதியாகவும் இருக்கிறது என ஜனநாயகக் கட்சி மகளிர் குழு (ASF) தலைவர் பில்ட் அன் சன்டாக் தெரிவித்துள்ளார்.

பல இளைஞர்கள் அழகியல் காரணங்களுக்காக ஹெல்மெட் இல்லாமல் செல்கிறார்கள். அதனை மாற்றுவதே நோக்கமாக உள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers