சட்டவிரோத கார் பந்தயத்தில் ஈடுபட்டு வயதான நபரை கொன்ற இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் நடந்த சட்டவிரோத கார் பந்தயத்தில் ஓய்வூதியக்காரரை கொன்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு ஆண்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜேர்மனிய சட்டவிரோத கார் பந்தய பரிசோதனையில் கடந்த ஆண்டு பெடரல் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் (பி.ஹெச்.ஹெச்) முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதிலும், அதில் கொல்லப்பட்ட நோக்கத்திற்கான போதிய ஆதாரங்கள் இருந்திருக்கவில்லை.

இதனால் இந்த வழக்கு மீள்விசாரணை செய்யப்பட்டதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை பொறுப்பற்றதனமாக எடுத்துக்கொண்டது, கவனக்குறைவு போன்றவை கவனிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் 24 மற்றும் 27 வயதுடைய இரு ஆண்கள் பேர்லினின் புகழ்பெற்ற Kurfüststendam boulevard இல் கார் ஓட்டப்பந்தயத்தை நடத்தினர், அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் சென்றனர்.

இதில், ஹமீத் என்பவரது கார் ஓய்வு பெற்ற மருத்துவரின் மீது மோதியதில் தெருவில் தூக்கியெறிப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers