ஜேர்மனியில் புலம்பெயர்ந்தவரால் குத்தி கொல்லப்பட்ட தென் இந்தியர்! உயிருக்கு போராடும் மனைவி... புகைப்படங்கள் வெளியானது

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் இந்தியாவை சேர்ந்த தம்பதி கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட சம்பவத்தில் கணவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் பூர்வீகம் கர்நாடகா என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

அதன்படி ஜேர்மனியின் Munich நகரின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கர்நாடாகவை பூர்விகமாக கொண்ட தம்பதிகளான பிரசாந்த் பஷாருர் மற்றும் அவர் மனைவி ஸ்மிதா ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த புலம்பெயர்ந்த New Guinea தீவை சேர்ந்த 33 வயதான நபர், பிரசாந்த் மற்றும் ஸ்மிதாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

தம்பதிக்கும், புலம்பெயர்ந்த நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, வாக்குவாதம் ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இதில் பிரசாந்த் உயிரிழந்த நிலையில், ஸ்மிதா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தம்பதியின் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தம்பதியின் குழந்தைகள் ஜேர்மனி அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் பிரசாந்தும், ஸ்மிதாவும் ஜேர்மனிக்கு வந்த நிலையில் கடந்த ஆண்டு அவர்களுக்கு அந்நாட்டின் குடியுரிமை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்