ஜேர்மனில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய தம்பதி: விசா மறுப்பு என தம்பி குற்றச்சாட்டு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இந்திய நபரின் தம்பி வினய், தங்களுக்கு இதுவரை இந்திய அரசாங்கம் சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட தம்பதிகளான பிரசாந்த் பஷாருர் மற்றும் அவர் மனைவி ஸ்மிதா ஆகியோர் Munich நகரின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து, புலம்பெயர்ந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், பிரசாந்த் உயிரிழந்துவிட்ட நிலையில், மனைவி ஸ்மிதா அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் வசித்து வரும் பிரசாந்தின் சகோதரர் வினய் கூறியதாவது, எனது அம்மா மற்றும் ஸ்மிதாவின் பெற்றோர் ஜேர்மன் செல்வதற்கு விசா கோரியுள்ளனர். அவர்கள் இன்று அல்லது நாளை ஜேர்மன் புறப்படுவார்கள். ஆனால், எனக்கு விசா மறுக்கப்பட்டுவிட்டது.

அரசாங்கம் தரப்பில் இருந்து இதுவரை எங்களுக்கு எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. இதுவரை உடுப்பி முன்னாள் எம்பி ஜெயபிரகாஷ் ஹெக்டே மட்டுமே எங்களுக்கு உதவி செய்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில் அரசியல் கட்சியினர் பரபரப்பாக செயல்பட்டுகொண்டிருக்கின்றனர். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை பாஜகவை சேர்ந்தவர்கள் எங்களுக்கு போன் செய்து, நாங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறோம், அனைத்து உதவிகளையும் செய்கிறோம் என கூறுகிறார்கள், ஆனால் இதுவரை ஒரு உதவியும் செய்யவில்லை.

ஜேர்மனியில் இருக்கும் எனது அண்ணனின் நண்பர் எங்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார். அண்ணனின் குழந்தைகள் இருவரும் பொலிசார் கட்டுப்பாட்டில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவத்தின் பின்னணி காரணம் குறித்து ஜேர்மன் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்