எனது தந்தை ஜேர்மனில் பிறந்தவர்: மீண்டும் தவறான தகவலை சொன்ன டிரம்ப்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது தந்தை ஜேர்மனியில் பிறந்தவர் என்ற தவறான தகவலை மீண்டும் ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கலை குறைகூறிய அவர், இராணுவ கூட்டணிக்கு போதுமான பங்கை ஜேர்மன் அரசு வழங்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ட்ரம்ப் கூறியதாவது, நான் ஏஞ்சலா மெர்க்கல் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். மேலும் ஜேர்மன் நாட்டின் மீது மரியாதை உள்ளது, ஏனெனில் எனது தந்தை ஜேர்மனில் ஒரு அற்புதமான இடத்தில் பிறந்தார்.

அதனால் ஜேர்மன் எனக்கு மிகவும் உணர்ச்சி மிகுந்த நாடு என கூறியுள்ளார்.

ஆனால் இது தவறான தகவல் என தெரியவந்துள்ளது. ட்ரம்பின் தந்தை Fred Trump நியூயோர்க்கில் பிறந்துள்ளார். டிரம்பின் தாத்தா Friedrich Trump, ஜேர்மனில் உள்ள Kallstadt என்ற கிராமத்தில் பிறந்தவர்.

1885 அம் ஆண்டு Friedrich Trump அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஈராணுடனான அணு சக்தி ஒப்பந்ததை முறித்துக்கொண்ட போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் டிரம்ப் தனது தந்தை ஜேர்மனியில் பிறந்தவர் என்ற செய்தியை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers