Brexit: அயர்லாந்தை பிளவுபட்டிருந்த ஜேர்மனியாக பார்க்கிறேன்: ஏஞ்சலா மெர்க்கல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஒரு பிளவுபட்ட நாட்டில் இருந்த அனுபவம் தனக்கு இருப்பதால் அயர்லாந்தை ஒரு பிளவுபட்ட ஜேர்மனியின் இடத்தில் தன்னால் வைத்துப் பார்க்க முடிவதாக ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து பிரீமியர் லியோ வரத்கருடன் டப்ளினில் நடைபெற்ற உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்றபின் பேசிய ஏஞ்சலா, வட அயர்லாந்திலுள்ள நாட்டைப் பிரிக்கும் எல்லையானது இரும்புத்திரைக்குப் பின்னால் வாழும் சூழலை ஒத்திருப்பதுபோல் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட்டை தடுத்து நிறுத்துவதற்காக மசோதா ஒன்றை நிறைவேற்றிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் பாராட்டினார். அயர்லாந்து எல்லைக்கு இருபுறமும் இருந்து வந்த 15 பேர் கொண்ட குழுவை இன்று அவர் சந்தித்தார்.

டப்ளினில் பேசும்போது ஏஞ்சலா, இன்றைய அனுபவம் எனக்கு மிக முக்கியமான அனுபவமாகும்.

பல ஆண்டுகளாக ஒரு சுவரால் பிரிக்கப்பட்டிருந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவள் நான். இரும்புத்திரைக்கு பின்னால் வாழ்ந்த எனக்கு, ஒரு நாட்டிற்கு நடுவிலுள்ள எல்லைகள் அழிந்தால் எப்படி இருக்கும் என்பது நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்காக பல உயிர்கள் தியாகம் செய்யப்பட்டன என்றார் ஏஞ்சலா. தீவிரமான பிரெக்சிட் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பிரெக்சிட் குறித்து அயர்லாந்து பிரீமியர் லியோ வரத்கருடன் விவாதிப்பதற்காக, ஏஞ்சலா நேற்று டப்ளினுக்கு சென்றார்.

ஒப்பந்தங்கள் எதுவுமின்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் சூழல் இருக்கும் ஒரு நிலையில், அதற்கு இன்னும் எட்டே நாட்கள்தான் இருப்பதால், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் இன்னொரு கால தாமதத்திற்காக நேரம் கேட்கும் திட்டம் இருந்தால், நல்ல ஒரு காரணத்தை முன்வைக்க வேண்டும் என லியோ பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தார்.

பிரெக்சிட் நிறைவேறும் வய்ப்புள்ளதான ஏப்ரல் 12க்கு இரண்டு தினங்களுக்கு முன்பு ஐரோப்பிய கவுன்சிலின் ஒரு அவசர உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசி நிமிடம் வரைக்கும் ஒப்பந்தங்களற்ற ஒரு பிக்ரெக்சிட் நிறைவேற விடாமல் தடுப்பதற்கு ஜேர்மன் சார்பில் என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்வோம் என்றார் ஏஞ்சலா.

ஆனாலும் இதை பிரித்தானியாவுடன் இணைந்துதான் செய்வோம், அதுவும் அவர்கள் எங்களை எந்த அளவிற்கு அனுமதிக்கிறார்களோ அந்த அளவில், என்பதையும் கூற ஏஞ்சலா மறக்கவில்லை.

இதற்கிடையில் பிரித்தானிய பிரதமர் தெரஸா மே, ஜெரமி கார்பினுடன் பேச்சு வார்த்தைகள் மூலம் ஒரு நல்ல முடிவை எட்ட முயன்று வருகிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers