சவுதிக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் தொடர்ந்து தடை விதித்த ஜேர்மன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு தற்காலிக தடை விதித்துள்ள ஜேர்மனி அந்த தடையை தற்போது நீட்டித்துள்ளது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து, ஆயுத விற்பனையை தற்காலிக தடை செய்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடைசியாக அனுப்பிவைக்கப்பட்ட ஆயுதங்கள் ரியாத் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு மீண்டும் தடையை நீட்டித்துள்ளது. இந்த தடை செப்டம்பர் 30 ஆம் திகதி வரை உள்ளது என சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கலின் செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் சவுதி நாட்டுடன் எவ்வித புதிய ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படாது என தனது அமைச்சரவையை கலந்தாலோசித்து முடிவு எடுத்துள்ளார்.

ஆனால், ஜேர்மனியின் இந்த முடிவை பிரித்தானியா, பிரான்ஸ் நாடுக்ள் விமர்சித்துள்ளன. ஏனெனில் இவ்விரு நாடுகளும் சவுதிக்கு ஆயுதங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன. பொருளாதாரம் கருதி கலந்தோலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers