உளவு பார்த்ததாக இந்திய தம்பதி மீது குற்றச்சாட்டு: என்ன தண்டனை தெரியுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் சீக்கிய சமுதாயம் மற்றும் காஷ்மீரி இயக்கம் குறித்து உளவு பார்த்ததாக ஒரு இந்திய தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்களது பெயர்கள் மன்மோகன் என்றும், கன்வால் ஜிட் என்றும் தெரியவந்துள்ளது.

இந்திய உளவுத்துறையின், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு ஜேர்மனியின் சீக்கிய சமுதாயம் மற்றும் காஷ்மீரி இயக்கம் குறித்து தகவல்களை தெரிவிக்க மன்மோகன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த இந்திய உளவுத்துறை அலுவலருடனான மாதாந்திர கூட்டம் ஒன்றில் மன்மோகன் சிங் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.

இதற்காக அந்த தம்பதிக்கு 7,200 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்காக அந்த தம்பதிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers