நாஜி அமைப்பிடம் இருந்து தொடரும் மிரட்டல் மின்னஞ்சல்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் நாஜி அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

200 க்கும் அதிகமான வன்முறை மின்னஞ்சல்களை அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கைது செய்யப்பட்ட நபரின் கூட்டாளியாக இருக்கும் நபர் தொடர்ந்து அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சல்கள் பெரும்பாலும் இடதுசாரி அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

பேர்லின் நகர அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான படுகொலைகள் நாட்டில் நடத்தப்பட வேண்டும், மேலும் இடதுசாரி பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாதுகாப்பாக இல்லை என்று அந்த மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல், கொலை செய்வோம் என மின்னஞ்சல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் கைது செய்யப்பட்ட நபரின் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers