சுற்றுலா சென்ற இடத்தில் முகம் சிதைக்கப்பட்டு நிர்வாணமாக கிடந்த இளம்பெண்: அதிர்ச்சியடைந்த பொலிஸார்!

Report Print Vijay Amburore in ஜேர்மனி

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஜெர்மனி பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த Miriam Beelte (26) என்கிற இளம்பெண் தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 6 மணியளவில் கோ சி சிங் பகுதியில் உள்ள தீவில், அவருடைய உடல் நிர்வாணமாக இரு சிறிய பாறைகளுக்கு நடுவில் கண்டெடுக்கப்பட்டது.

அவருடைய உடல் முழுவதும் ரத்தக்கறைகள் படிந்தவாறு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த உள்ளூர் நபர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், Miriam Beelte-ன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேசமயம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதன்பேரில் தாய்லாந்தை சேர்ந்த ரொனால்னன் ரோமுருன் (24) என்கிற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய அந்த இளைஞர், அந்த பெண்ணிடம் நான் முதலில் பேச முயற்சித்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டு பொலிஸாரிடம் கூறுவதாக என்னை மிரட்டினார்.

பின்னர் அவர் தீவில் உள்ள மலைப்பகுதிக்கு செல்வதை அறிந்துகொண்டு, பின் தொடர ஆரம்பித்தேன். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை கடத்தி துஸ்பிரயோகம் செய்தேன். என்னுடைய முகம் அவருக்கு நன்கு தெரியும் என்பதால் கொலை செய்ய முடிவெடுத்து, அவருடைய முகத்தை கல்லால் அடித்து நொறுக்கினேன் என கூறியுள்ளான்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், கொலைகாரன் இளம்பெண்ணை எப்படி கொலை செய்தான் என்பதை செய்துகாட்டுமாறு கூறி வீடியோவாக எடுத்துள்ளோம். இந்த சம்பவத்தில் இளம்பெனின் கழுத்து மற்றும் ஒரு கால் எலும்பு முழுவதுமாக முறிந்துள்ளது. திட்டமிட்ட கொலை, கற்பழிப்பு மற்றும் உடலை மறைத்தல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சட்ட ஆவணத்தை தயாரிப்பதற்கு, சோனுபூரி பொலிஸ் நிலையத்தில் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers