வெடித்துச் சிதறும் இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு: அரிய வீடியோ!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இரண்டாம் உலகப்போர் காலத்தைய வெடிகுண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டபோது, 30 அடி உயரத்திற்கு நீரூற்று போல் தண்ணீர் சிதறியதைக் காட்டும் அரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிராங்பர்ட்டில் அந்த வெடிகுண்டு நேற்று வெடிக்கச் செய்யப்பட்டது.

அது 250 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப்போர் காலத்தைய வெடிகுண்டாகும். வெளியாகியுள்ள வீடியோவில், பிராங்க்பர்ட்டின் Main நதியில் அந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறும் காட்சிகளைக் காணலாம்.

இந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்படும் நிகழ்வின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் பல பாகங்களிலுள்ள 600 பேர் வரை வெளியேற்றப்பட்டனர்.

அந்த வெடிகுண்டு வெடித்ததும், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் நதிக்கடியில் சென்று அந்த வெடி குண்டு முழுமையாக வெடித்துச் சிதறியதை உறுதி செய்தனர்.

இனி அந்த வெடிகுண்டினால் எந்த அபாயமும் இல்லை என பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers