இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் ஜேர்மன் அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள அறிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இலங்கை குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஜேர்மன் அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தேவாலயங்களையும் ஹொட்டல்களையும் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 300க்கும் மேலானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினர் பாதுகாக்கப்படவேண்டும் என குரல் கொடுத்துள்ளனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக உலகம் முழுவதிலும் அதிகரித்து வரும் வன்முறை குறித்து, ஏஞ்சலா மெர்க்கலின் CDU கட்சியினர், FDP கட்சியினர் மற்றும் கிரீன்ஸ் கட்சியினர் என அனைத்து கட்சி உறுப்பினர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மத சுதந்திரத்திற்கான ஜேர்மனியின் ஆணையர் Markus Grübel (CDU), இலங்கையில் நிகழ்ந்த தாக்குதலை, தான் உலகம் முழுவதும் நிகழும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறையின் ஒரு பகுதியாகவே பார்ப்பதாக தெரிவித்தார்.

உலகம் முழுவதிலும் கிறிஸ்தவர்கள் தீவிரவாத இஸ்லாமியர்களின் இலக்காக உள்ளார்கள் என்று கூறியுள்ள Grübel, கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஏன் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்.

FDP கட்சியின் துணை தலைவரான Michael Theurer, பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கிரீன்ஸ் கட்சி உறுப்பினரான Sven Giegold, உலகம் முழுவதிலும் கிறிஸ்தவர்களின் மத சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக தெரிவித்தார்.

உலகம் முழுவதிலும் மத சுதந்திரத்திற்காக ஐரோப்பா குரல் கொடுக்க வேண்டும் என்கிறார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers