சினிமா பாணியில் கோடீஸ்வரர் என்று கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஜேர்மன் பெண்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ரஷ்யாவில் பிறந்து ஜேர்மனியில் வாழும் பெண் ஒருவர் பிரபல திரைப்படம் ஒன்றில் வருவது போல, தான் ஒரு கோடீஸ்வர வாரிசு என்று கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Anna Delvey என்று தன்னை அழைத்துக் கொள்ளும் Anna Sorokin, நண்பர்களையும் வங்கிகளையும், ஹொட்டல்களையும், தான் 60 மில்லியன் யூரோக்களுக்கு வாரிசு என்று கூறி ஏமாற்றி சுமார் 250,000 யூரோக்கள் வரை மோசடி செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பல மோசடி குற்றங்களில் ஈடுபட்ட Anna குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

அவருக்கு மே மாதம் 9ஆம் திகதி தண்டனை வழங்கப்பட உள்ளது. ஒரு முறை Anna முதலீட்டு நிறுவனம் ஒன்றில் 22 மில்லியன் டொலர்கள் கடன் கேட்க, அந்நிறுவனம் 100,000 டொலர்கள் முதலீடு செய்தால் கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

உடனே இன்னொரு வங்கியை அணுகிய Anna, அந்த வங்கியை நம்பவைத்து அந்த தொகையை கடனாக வாங்கி முதலீட்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார்.

இப்படியே தனது நண்பர்கள் உட்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார் Anna. மாஸ்கோவுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் பிறந்த Anna, 16 வயதாகும்போது மேற்கு ஜேர்மனிக்கு குடி பெயர்ந்துள்ளார்.

சிறு வயதில் மிகவும் நாணமுள்ளவராகவும், ஜேர்மன் மொழி பேச திணறுபவராகவும் இருந்திருக்கிறார் Anna.

பின்னர் பாரீஸிலும் லண்டனிலும் கல்வி பயின்று, வேலை பார்த்த Anna, தன்னை ஒரு பணக்கார கலைப்பொருள் சேகரிப்பாளராக காட்டிக் கொண்டுள்ளார்.

ஒரு செல்வந்தரின் வாரிசாக தன்னைக் காட்டிக் கொண்ட Anna, சிறையில் சில காலம் கழிக்க இருக்கும் நிலையில், அவரது கதை இரண்டு சினிமாக்களாக உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers