ஜேர்மானிய முதியவர் தூங்கும்போது கழுத்தை அறுத்து கொன்ற புகலிடக் கோரிக்கையாளர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானிய முதியவர் ஒருவர் தூங்கும்போது கழுத்தை அறுத்து கொன்ற புகலிடக் கோரிக்கையாளர் மீது விசாரணை துவங்கியுள்ளது.

ஆப்கனைச் சேர்ந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், 85 வயது ஜேர்மானியர் ஒருவரை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு நாள் அந்த முதியவர் தூங்கும்போது, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் 20 வயதுள்ள அந்த புகலிடக் கோரிக்கையாளர்.

அகதிகள் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றில் பணியாற்றும் அந்த முதியவரின் மகள்தான் அந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு இந்த வேலையை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

அந்த முதியவரின் மகளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர் பொலிசார். Wittenburg நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஒன்றில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த கொலையின் பின்னணியில் அரசியல் அல்லது மதப்பின்னணி எதுவும் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்