பசி ஏற்பட்டதால் 20,000 யூரோக்கள் செலவு வைத்த நாய்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பசி ஏற்பட்டதால் தனது உணவை தானே தேடி எடுத்துக் கொள்ள முயன்ற ஒரு நாயால் 20,000 யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு ஜேர்மனியின் சாக்ஸனியில் உள்ள ஒரு வீட்டில் நெருப்பு ஏற்பட்டதற்கான அலாரம் ஒலித்ததையடுத்து அவசர உதவி குழுவினர் அங்கு விரைந்தனர்.

அந்த வீட்டிலிருந்த நாய் ஒன்று, பசித்ததால், மரப்பலகை ஒன்றின் மீதிருந்த உணவை எடுப்பதற்காக ஸ்டவ் மீது சாய்ந்திருக்கிறது.

அதனால் தவறுதலாக ஸ்டவ் ஆன் ஆக, மரப்பலகை தீப்பிடித்திருக்கிறது. அந்த தீ விரைவாக சமையலறை முழுதும் பரவியிருக்கிறது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தரை தளத்திலிருந்த அந்த வீட்டில் பற்றிய தீ, மற்ற தளங்களுக்கும் பரவாமல் தீயை அணைத்திருக்கின்றனர்.

புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட மூவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த தீ விபத்தால் சுமார் 20,000 யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக அந்த நாய் தீயினால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்