ஜேர்மனியின் ஆயுத ஏற்றுமதி விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

மத்திய கிழக்கு நாட்டிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி மீதான தடையை நீக்குமாறு ஜேர்மனிக்கு, ஐரோப்பிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கலின் தலைமையிலான அமைச்சரவை ஏமன் போரில் நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களின் பாகங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஜேர்மன் அரசாங்கம் சவுதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனை ஏற்றுமதியை தடை செய்த இரண்டு வாரங்களுக்கு பின்னர் இந்த ஒப்புதல்கள் வந்துள்ளன.

பத்திரிகையாளர் கஷோகி கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சவுதி அரேபியாவிற்கு ஆயுத ஏற்றுமதியை ஜேர்மன் அரசாங்கம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் அரசின் இந்த தடை ஐரோப்பிய நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்