லொறி மீது ரயில் மோதி பயங்கர விபத்து..ஜேர்மனியில் சோகம்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் லொறி மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் வடக்கு ஜெர்மனியின் ரேன்ஸ்பர்க்-எகன்பன்போர்ட் மாவட்டத்தில் நடந்துள்ளது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர உதவி அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மேலும், 10 பேர் சிறிய காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இந்த விபத்து காரணமாக ஹம்பர்க் மற்றும் ஃப்ளென்ஸ்பர்க் இடையேயான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்