அதிக வேகத்தில் பறந்த புறாவுக்கு அபராதம்: வைரலான ஒரு புகைப்படம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரம் ஒன்றில், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் பறந்த ஒரு புறாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக செல்லும் வாகனங்களை புகைப்படம் எடுக்கும் தானியங்கி கெமரா, அந்த புறாவை புகைப்படம் எடுத்துள்ளது.

அதிகாரிகளால் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

மேற்கு ஜேர்மனியிலுள்ள Bocholt நகரில் ஒரு புறா, மணிக்கு 30 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டிய இடத்தில் வேகக்கட்டுப்பாட்டை மீறி மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பறந்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு பொதுவாக 25 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வளவு வேகத்தில் பறக்கும் ஒரு புறாவால், வாகனங்கள் அல்லது நடந்து செல்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்று நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த புறாவுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும் என ஒருவர் கூறியுள்ள நிலையில், எப்படி அந்த புறாவால் 25 யூரோக்கள் அபராதம் செலுத்த முடியும் என்று Bocholt நகரின் முகநூல் பக்கம் கூறுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers