ஜேர்மனியிலிருந்து ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன் - விண்ட்சருக்கு சில பரிசுகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் சேன்ஸலர், பவேரிய பிரீமியர் முதலானோர் பிரித்தானிய குட்டி இளவரசர் ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன் - விண்ட்சருக்கு சில பரிசுகளை வழங்கியுள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் தங்கள் முதல் குழந்தையை வரவேற்றுள்ள நிலையில், ஹரியின் தந்தை சார்லசும் அவரது மனைவி கமீலாவும் ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தபோது, ஜேர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier குட்டி இளவரசர் ஆர்ச்சிக்காக ஒரு கரடி பொம்மையை (teddy bear) பரிசளித்தார்.

அதேபோல் பவேரிய பிரீமியரான Markus Söder ஜேர்மன் பாரம்பரிய உடைகளில் ஒன்றான lederhosen என்னும் உடையை குட்டி இளவரசருக்கு பரிசாக வழங்கினார்.

அவர்கள் வழங்கிய பரிசுகளை ஆர்ச்சியின் தாத்தா இளவரசர் சார்லஸ் குழந்தையிடம் வழங்க உள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers