வாகனத்தில் பிரேக் போட மறந்த பெண்: ஜேர்மன் சேன்ஸலரின் விமானத்தில் மோதியதால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் சேன்ஸலரின் விமானத்தைக் கண்ட ஒரு பெண் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக தனது வேனில் இருந்து குதித்தார்.

ஆர்வமிகுதியால் வேனின் கை பிரேக்கை போட மறந்ததால் வேன் தானாக நகர்ந்துள்ளது.

நகர்ந்து சென்ற வேன் நேராக சென்று ஏஞ்சலா மெர்க்கலின் விமானத்தின் மூக்கு பகுதியில் மோதியுள்ளது.

இதனால் ஏஞ்சலா மெர்க்கல் விமானத்தை விட்டு விட்டு ஹெலிகொப்டரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த பெண் Dortmund விமான நிலையத்தில் வேலை செய்யும் பெண் ஆவார்.

இந்த சம்பவத்தால் Dortmundஇலிருந்து பெர்லின் புறப்பட்ட ஏஞ்சலா தாமதாக சென்றார்.

மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் ஏஞ்சலா மெர்க்கல் விமானத்தில் ஏறியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers