ஜேர்மனியில் புதிய தடை அமல்.. எதற்கு என்று தெரியுமா?

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் மின்-ஸ்கூட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள அதே சமயம் மின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் மின்-ஸ்கூட்டர் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதில், இதற்கு ஆதரவாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்ததையடுத்து மின்-ஸ்கூட்டர்கள் மசோதா பல கட்டுப்பாடுகளுடன் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

ஐரோப்பாவில் மின்-ஸ்கூட்டர் மீதான மோகம் அதிகரித்துவரும் வேளையில், பாதசாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் மின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்-ஸ்கூட்டர்களை சாலைகளிலும் சைக்கிள்பாதைகளிலும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டுப்பட்டுள்ளது. சாலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே மின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்த முடியும்.

மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் குறைந்தது 14 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டை அவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது..

ஜேர்மனி மிகச் சிறந்த சாலை பாதுகாப்புடன் எதிர்கால சங்கதியினருக்கு வழிவகுத்துள்ளது என அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் Andreas Scheuer தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers