சரிந்து விழுந்த மூன்று மாடி கட்டிடம்: சிக்கிய குழந்தைகளை மீட்கும் பணி தீவிரம்

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனின் பவேரியா பகுதியில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டதில் 3 மாடி கட்டிடம் தரையில் சரிந்துள்ளது. இதில் இடர்பாடுகளில் சிக்கியிருக்கும் இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு ஜேர்மனின் பவேரியா பகுதியில் உள்ள வீடு ஒன்றில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இதில் மூன்று மாடி கட்டிடம் அப்படியே தரையில் சரிந்துள்ளது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், பலத்த காயங்களுடன் பெண் ஒருவரை மீட்டுள்ளனர்.

காணாமல் போன அவரது 47 வயதான கணவர் மற்றும் இரண்டு மகள்கள் இடர்பாடுகளுக்கே நடுவே சிக்கி இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

சுமார் 150 பேர் தற்போது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிற்கு முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்கள் மற்றும் பக்கத்து வீடுகள் சேதமடைந்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்