வயலை காணவில்லை: ஜேர்மனியில் ஒரு வித்தியாசமான புகார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தனது வயலில் விளைந்த மொத்த ஸ்ட்ராபெரி பழங்களையும் காணவில்லை என ஜேர்மனியில் ஒருவர் பொலிசாரிடம் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜேர்மனியின் Lambsheim பகுதியில் உள்ள தனது வயலில் விளைந்திருந்த மொத்த ஸ்ட்ராபெரி பழங்களையும் திருடர்கள் திருடிச் சென்றுவிட்டதாக ஜேர்மன் விவசாயி ஒருவர் பொலிசாரிடம் புகாரளித்தார்.

1.7 ஏக்கர் நிலத்தில் அவர் விளைவித்திருந்த மொத்த ஸ்ட்ராபெரி பழங்களையும் இரவு நேரத்தில் யாரோ திருடிச் சென்றிருந்தனர்.

பலர் இணைந்து இந்த திருட்டை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

பல வாகனங்களை பயன்படுத்தி அவர்கள் ஸ்ட்ராபெரி பழங்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ள பொலிசார், பொதுமக்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களைக் கண்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த திருட்டால் ஆயிரக்கணக்கான யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதுபோல் பழங்களை திருடுவது ஜேர்மனியில் இது முதல்முறையல்ல, கடந்த ஆண்டும் இதேபோல் Bad Sobernheim என்ற நகரில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து திருடர்கள் பழங்களை திருடி ஆன்லைனில் விற்றுவிட்டனர்.

ஜேர்மனி ஆண்டொன்றிற்கு 160,000 டன் ஸ்ட்ராபெரி பழங்களை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்