ஆமைகளை வேட்டையாடி உண்ணும் குரங்குகள்: ஒரு அபூர்வ நிகழ்வு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

முதல் முறையாக சிம்பன்சி வகை குரங்குகள், ஆமைகளை வேட்டையாடி உண்ணும் அபூர்வ நிகழ்வு ஒன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது.

1960களின் துவக்கம் வரை சிம்பன்சிகள் பழங்கள், கொட்டைகள், பூக்கள் மற்றும் இலைகளை மட்டுமே உண்ணும் என கருதப்பட்டது.

ஆனால் மனித இனத்துக்கு நெருக்கமானது என கருதப்படும் சிம்பன்சிகள், மனிதனைப்போலவே அனைத்துண்ணிகளாக இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

Dr Jane Goodall என்னும் குரங்கியல் ஆய்வாளர் ஒருவர்தான், முதன் முதலில் குரங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடுவதை கண்டறிந்தவர்.

அதேபோல் குரங்குகள் வேட்டையாட கருவிகளை பயன்படுத்துவதையும் அவர்தான் முதலில் கண்டறிந்தார்.

ஜேர்மனியைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் Gabon என்ற பகுதியில் இரண்டாண்டுகள் நடத்திய ஆய்வின்போது சிம்பன்சிகள் ஆமைகளை வேட்டையாடுவதை படம் பிடித்துள்ளனர்.

ஆமைகளை பிடிக்கும் சிம்பன்சிகள் அவற்றின் ஓடு கடினமாக இருப்பதால், ஆமைகளை மரத்தில் மோதியடித்து உடைத்து, அதனுள் இருக்கும் இறைச்சியை உண்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

அத்துடன் இன்னொரு முக்கிய செயலும் கண்டு பிடிக்கப்பட்டது, அதாவது தான் ஆமைகளை கண்டு பிடிக்கும்போது, அவற்றின் இறைச்சியை எதிர் கால தேவைக்காக சிம்பன்சிகள் சேமித்து வைப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

இதில் என்ன முக்கியத்துவம் என்றால், உணவை எதிர் காலத்துக்காக சேமித்து வைத்து, பின் தேவை வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ளும் குணம், மனிதர்களில் மட்டுமே கானப்படுவதாக நீண்ட காலத்திற்கு கருதப்பட்டதுதான்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்