பிரித்தானியரை சுட்டுக்கொன்ற ஜேர்மன் பொலிசார்: பின்னணி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் தனது முன்னாள் மனைவியை கொன்றுவிடுவதாக மிரட்டிய பிரித்தானியர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜேர்மனியிலுள்ள Kreetortring என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் ஒரு ரஷ்ய பெண், தனது முன்னாள் கணவர் தன் வீட்டுக்குள் நுழைந்து தன்னையும் தனது மகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாக பொலிசாருக்கு தகவலளித்தார்.

பொலிசார் அங்கு சென்றபோது அந்த நபர் கத்தியைக் கீழே போடாமல், பொலிசாரையும் கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டியிருக்கிறார்.

வேறு வழியின்றி பொலிசார் அந்த 34 வயது நபரை துப்பாக்கியால் சுட, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

முதலில் ஜேர்மன் பத்திரிகைகள் அந்த நபர் ஒரு பிரித்தானியர் என செய்தி வெளியிட்டிருந்தன.

பின்னர் விசாரணையில் அவர் பிரித்தானிய மற்றும் ஐரிஷ் ஆகிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பது தெரியவந்தது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers