மனைவி மகன்களை கத்தியால் குத்திய நபர்: உயிர் தப்பிய மகன் இரத்தம் சொட்ட தப்பி ஓடிய பரிதாபம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் வீடு ஒன்றிலிருந்து, போதும் அப்பா என்று கதறியபடியே இரத்தம் சொட்ட சொட்ட ஓடி வந்த சிறுவனைக் கண்ட அயலகத்தார் பொலிசாரை அழைக்க, அவனது தந்தை ஏற்கனவே அவனது தாயையும் தம்பியையும் கொலை செய்திருந்தது தெரியவந்தது.

மேற்கு ஜேர்மனியின் Tiefenbronn நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 11 வயது சிறுவன் ஒருவன், போதும் அப்பா, என்று கத்தியபடியே ஓடி வந்தான். அவனது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயத்திலிருந்து இரத்தம் வெளியேறியபடி இருந்தது.

தகவலறிந்து பொலிசார் வந்தபோது, அந்த வீட்டில் 38 வயது பெண் ஒருவரும் அவரது எட்டு வயது மகனும் பிணமாக கிடப்பதைக் கண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த வீட்டிலிருந்த Josef H (60) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கழுத்தில் காயம் பட்ட 11 வயது சிறுவன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Josef உடலிலும் காயங்கள் இருந்ததால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Josef எதற்காக மனைவியையும் பிள்ளைகளையும் கத்தியால் குத்தினார் என்பது தெரியவில்லை.

அவரது உடல் நிலை சற்று தேறியதும் அவர் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார். Josefஐ அதிகமாக வெளியில் பார்க்க முடியாது என்று கூறியுள்ள அயலகத்தார், ஆனால் அவர் எப்போதும் சண்டையிடும் சத்தத்தை கேட்டுள்ளதாக தெரிவித்தனர்.

என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers