ஜேர்மனியில் புதிய யூரோ நோட்டுகள் அறிமுகம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

புதிய 100 மற்றும் 200 யூரோ நோட்டுகளை ஜேர்மனி அறிமுகம் செய்துள்ளது.

இவை கள்ள நோட்டுக்காரர்களால் காப்பி அடிக்க முடியாத சிறப்பம்சங்களைக் கொண்ட நோட்டுகளாகும்.

ஜேர்மனியில் யூரோ நோட்டுகளை அறிமுகம் செய்வது இது இரண்டாவது முறையாகும்.

ஏற்கனவே 2002இல் ஒரு முறை யூரோ நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஏப்ரல் மாத இறுதியிலிருந்து 500 யூரோ நோட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.

ATM வைத்திருப்பவர்கள் ஏற்கனவே நோட்டுகள் பொருந்தும் வகையிலான மாற்றங்களை ஒன்பது மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டதால் ATMகளிலும் எந்த பிரச்சினையும் இருக்காது.

கடந்த ஆண்டில் புழக்கத்தில் இருந்த யூரோ நோட்டுகளில் ஆறு சதவிகிதம் 100 யூரோ நோட்டுகள் மற்றும் ஒரு சதவிகிதம் 200 யூரோ நோட்டுகளும் ஆகும்.

என்றாலும் புதிய நோட்டுகள் உடனடியாக கிடைக்கும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும், காரணம் மெதுவாகவும் படிப்படியாகவும்தான் அவை புழக்கத்தில் விடப்பட உள்ளன.

பழைய நோட்டுகளும் படிப்படியாக புழக்கத்திலிருந்து அகற்றப்படும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers