படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக சிறுமியை கொலை செய்த ஈராக் நாட்டவர் கைது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக கொளுத்தும் வெயிலில் சிறுமியை நாய் போல கட்டிப்போட்டு கொலை செய்த பெண்ணின் கணவர் கிரீஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jennifer என்னும் பெண், கொலை மற்றும் தீவிரவாத அமைப்பு ஒன்றில் உறுப்பினராக இருந்த குற்றங்களுக்காகவும், ஒரு போர்க்கைதியாகவும் முனிச்சில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Jennifer (27), யாஸிடி இனப்பெண் ஒருவரையும் அவரது மகளையும் விலைக்கு வாங்கி அடிமைகளாக தனது வீட்டில் வைத்துள்ளார்.

ஒரு நாள் அந்த சிறுமி தனது படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக Jenniferஇன் கணவரான Taha, அந்த சிறுமியை கொளுத்தும் வெயிலில் சங்கிலியால் கட்டி போட்டிருக்கிறார்.

அப்போது அந்த சிறுமி தாகத்தால் கதற, அவளுக்கு தண்ணீர் கூட குடிக்கக் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அந்த சிறுமியின் தாய் அவர்கள் காலில் விழுந்து கதறியபோது அவரை காலால் எட்டி உதைத்துள்ளார் Taha.

Jennifer ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருடைய கணவரான Tahaவும் கிரீஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈராக் குடிமகனான Taha, ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்படும் நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை உறுதி என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச சட்டத்தின்படி, போர்க்குற்றவாளிகள் எங்கு குற்றம் செய்திருந்தாலும், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் விசாரிக்கப்படலாம் என்பதால் Taha ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்