ஜூன் மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இந்த மாதத்தில் ஜேர்மனியில் இ-ஸ்கூட்டர்களுக்கான கட்டணம் முதல் பல மாற்றங்கள் நிகழ இருக்கின்றன.

கத்திகள் மீது கடும் கட்டுப்பாடு

கத்திகள் மீதான கட்டுப்பாடுகள் ஜூன் 1இலிருந்து கடுமையாக்கப்பட உள்ளன. என்றாலும் தங்கள் வேலைக்காக கத்திகளை பயன்படுத்துவோருக்கு விலக்கு அளிப்பதற்கான திட்டம் ஒன்றும் கைவசம் உள்ளது.

பல துறைகளில் ஊதிய உயர்வு

வேலைக்கான பயிற்சியில் இருப்போருக்கு கூட உதவித்தொகை உயர்த்தப்பட உள்ளது. 60 யூரோக்களாக இருந்த உதவித்தொகை 90 யூரோக்களாக உயர்த்தப்படுகிறது. அத்துடன் 2020 ஜூன் 1இல் மீண்டும் அது உயர்த்தப்படும்.

இதுபோக சில மாகாணங்களில் ஸ்டீல் பணியாளர்களின் ஊதியமும் உயர இருக்கிறது. ஜேர்மனி முழுவதிலும் கட்டுமானப்பணிக்காக சட்டங்களை அமைப்போருக்கும் மணிக்கு 11.35 யூரோக்களாக இருந்த ஊதியம் இனி மணிக்கு 11.88 யூரோக்களாக உயர இருக்கிறது.

பெர்லினில் டீசல் வாகனங்களுக்கு தடை

தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படாத அளவில் புகையை வெளியிடும் டீசல் கார்களுக்கு, பெர்லினின் அதிக போக்குவரத்து உள்ள தெருக்களில் தற்போதைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, ஜூன் மாத இறுதியில் அந்த தடை அனைத்து தெருக்களுக்கும் விதிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

Saxonyயில் தரமான பள்ளிகள்

Saxonyயில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன. அதற்காக ஆசிரியர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஜேர்மனிக்குள் நுழையும் இ-ஸ்கூட்டர்கள் ஜூன் 15 முதல் அதிகாரப்பூர்வமாக இ-ஸ்கூட்டர்கள் ஜேர்மனி தெருக்களில் வலம் வர இருக்கின்றன.

பாதுகாப்பு பணியாளர்கள் பதிவேட்டில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும்.

நம்பிக்கைக்குரியவர்கள்தான் பணியில் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் புகலிடக்கோரிக்கையாளர்களின் ஹாஸ்டல்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் இருப்போர், பதிவேட்டில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும்

வாடகை உயர்வில் மாற்றங்கள்

North Rhine-Westphaliaவில் நில உரிமையாளர்கள் மட்டும் வாடகையை மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக 20 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று இருந்த விதி மே 31உடன் காலாவதியாகிறது.

அமேஸான் கட்டணத்தில் மாற்றம்

ஜூன் 5 முதல் அமேஸானில் விற்கப்படும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும், குறைந்தபட்சம் 30 செண்ட்கள் விற்பனை வரி விதிக்கப்பட உள்ளது.

என்றாலும் புத்தகங்கள், இசை வீடியோக்கள், DVDக்கள், மென்பொருள், வீடியோ கேம்கள், உணவு, பியர் மற்றும் ஒயின் போன்ற பொருட்களுக்கு இந்த வரி கிடையாது. கைப்பந்து விதிகளில் மாற்றம்

ஜூன் 1 முதல் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு போர்டு கைப்பந்து விதிகளில் சில மாற்றங்கள் செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்