ஏஞ்சலா மெர்க்கலின் முக்கிய கூட்டணி கட்சியின் தலைவர் ராஜினாமா: முன் கூட்டியே தேர்தல் வருமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஏஞ்சலா மெர்க்கலின் முக்கிய கூட்டணி கட்சியான SPD கட்சியின் தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதையடுத்து, முன் கூட்டியே தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏஞ்சலா மெர்க்கலின் முக்கிய கூட்டணி கட்சியான SPD கட்சியின் தலைவரான Andrea Nahles தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையிலும், தங்கள் கூட்டணி அரசு தொடரும் என ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

Andrea Nahlesஇன் முடிவை தான் மதிப்பதாக ஏஞ்சலா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தேர்தல்களில் தனது கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து Andrea Nahles தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஏஞ்சலாவுடன் கூட்டணியில் இருப்பதைக் குறித்து, அவரது கட்சியினராலேயே Andrea Nahles கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

CDU மற்றும் SPD கட்சிகளின் கூட்டணி குறைந்தபட்சம் 2021 ஃபெடரல் தேர்தல்கள் வரையாவது நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், Andrea Nahles ராஜினாமா செய்துள்ளதையடுத்து, கூட்டணியிலிருந்து SPD வெளியேறலாம் என்றும், அதனால் முன் கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers