2036 ஒலிம்பிக் போட்டிகளை ஜேர்மனியில் நடத்தும் திட்டம் இல்லை: உள்துறை அமைச்சர் திட்டவட்டம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

2036 இல் ஜேர்மனியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டம் இல்லை என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்று ஆண்டுகளுக்கு முன் 1936ஆம் ஆண்டு நடந்த விளையாட்டுப் போட்டிகள் ஹிட்லரின் நாஸி காலகட்டத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் பெர்லின் மாகாண உள்துறையின் அமைச்சரான Andreas Geisel, 2036 ஒலிம்பிக் போட்டிகளை ஜேர்மனியில் நடத்துவது குறித்து பரிந்துரைப்பதாக செய்தி வெளியானது.

அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

ஆனால் உள்துறை அமைச்சரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான Seehofer, ஜேர்மனி 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தாது என்றும், அப்படி நடத்தினால் அது நாஸி யுக பெர்லின் ஒலிம்பிக்கின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதை எப்படி பார்ப்பார்கள்?, நாஸி யுக பெர்லின் ஒலிம்பிக்கின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது போல்தானே பார்ப்பார்கள், அது நிச்சயம் நடக்காது என்றார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers