ஜேர்மன் பாராளுமன்றத்திற்குள் திடீரென புகுந்து படுத்து உறங்கிய 70 இளைஞர்கள்: காரணம் தெரியுமா?

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனில் இளைஞர் காலநிலை மாற்றம் ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாராளுமன்ற அமர்வு பாதிக்கப்பட்டது.

ஜேர்மன் பாராளுமன்ற அமர்வு நடந்துக்கொண்டிருந்த போது, திடீரென பேனருடன் நுழைந்த 70 இளைஞர் காலநிலை மாற்றம் ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்திற்குள் தரையில் படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, 317 இளைஞர் உறுப்பினர்கள் பங்கேற்ற ஒரு மாதிரி பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது. கன்சர்வேடிவ் CDU / CSU கட்சிகளின் இளைஞர் பிரிவின் பங்கேற்பாளர்கள் போராட்டகாரர்களை ஏளனம் செய்தனர்.

போராட்டகாரர்கள் சாதாரணமாக வெளியேற்றப்படுவார்கள் என்றால், நாளை வரை போராட்டம் தொடரும், நான் எப்போது பாராளுமன்ற அமர்வை தொடங்குவது என பாராளுமன்றத் தலைவர் வொல்ப்காங் ஸ்க்யூப்ளே நசைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

ஸ்கீபூலின் பிரதிபலிப்பு கூலாக இருப்பதாக எதிர்ப்பாளர்களில் ஒருவரான மாக்சிமிலியன் ரெய்மான் குறிப்பிட்டார், எங்களுக்கு பயம் தான் தேவையே தவிர கூல் தேவையில்லை, ஆனால் ஒரு நல்ல வகையான பயத்தினை, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி இந்த காலநிலை நெருக்கடியை வெல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers