ஆமையை கைது செய்து காவலில் அடைத்த ஜேர்மன் பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் Cologne நகரில், வயது முதிர்ந்த ஆமை ஒன்று சாலையை கடக்க முயன்றதையடுத்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சுமார் 70 வயதுள்ள அந்த ஆண் ஆமை, வாகனங்கள் அதிகம் செல்லும் நாற்சந்திச் சாலை ஒன்றை கடக்க முயன்றது.

ஆமையின் மீது மோதிவிடாமல் தவிர்ப்பதற்காக பல வாகனங்களின் ஓட்டுநர்கள் அவசரமாக பிரேக் போட வேண்டியதாயிற்று.

விரைந்து அங்கு வந்த பொலிசார், அந்த ஆமை சாலையில் செல்லும் மற்றவர்களை அலட்சியம் செய்து, சாலையை மறித்து, வேகமாகவும் செல்லாமல் அனைத்து சாலை விதிகளையும் மீறியது என நகைச்சுவையாக தெரிவித்தார்கள்.

அந்த ஆமையை கைது செய்த பொலிசார், தற்காலிகமாக அதை காவலில் அடைத்தனர். பின்னர் அந்த ஆமை விலங்குகள் காப்பகம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த ஆமை ஒருவேளை அதை வளர்ப்பவரால் கைவிடப்பட்டிருக்கலாம் அல்லது குளிர்காலத் தூக்கத்திலிருந்து எழுந்து அதன் மறைவிடத்திலிருந்து தப்பி வந்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.

விலங்குகள் காப்பகத்திலுள்ளவர்கள் அந்த ஆமை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அதிக வயதானதால் அதன் ஓடும் நகங்களும் மட்டும் சற்று சேதமடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers