கருக்கலைப்புக்கு விளம்பரம் செய்த ஜேர்மன் மருத்துவர்கள்: நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லின் மருத்துவர்கள் இருவர், தாங்கள் எப்படி கருக்கலைப்பு செய்கிறோம் என்பது குறித்து விளம்பரம் செய்ததற்காக, ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜேர்மன் அரசு கருக்கலைப்பு குறித்து விளம்பரம் செய்வது தொடர்பான நாஸி யுக தடை ஒன்றை நீக்கியிருந்தது.

ஆனால், புதுப்பிக்கப்பட்ட சட்டத்தின்படி, மருத்துவர்கள் தாங்கள் கருக்கலைப்பு செய்வதாக மட்டுமே விளம்பரம் செய்யலாம்.

ஆனால் பெர்லினில் மருத்துவமனை நடத்தி வரும் Bettina Gaber மற்றும் Verena Weyer என்னும் இரு மருத்துவர்கள், தாங்கள், மருந்துகளைக் கொண்டு, மயக்க மருந்து கொடுக்காமல், பாதுகாப்பான சூழலில் கருக்கலைப்பு செய்வதாக விளம்பரம் செய்திருந்தனர்.

எனவே ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று அவர்களுக்கு ஆளுக்கு 2,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.

மருத்துவர்கள் இருவரும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கருக்கலைப்பு குறித்து விளம்பரம் செய்வதன் மீதான தடை, பெண்களின் உரிமைகளை மதிக்கும் நோக்கில் நீக்கப்பட்ட நிலையில், எப்படி கருக்கலைப்பு செய்யப்படும் என்பது குறித்த விவரங்களையெல்லாம் வெளியிடலாம் என்பது அதன் பொருளல்ல.

எனவே இந்த இரண்டு மருத்துவர்களும் கருக்கலைப்பு செய்வது தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்டிருந்த விளம்பரங்கள் குறித்து, கருக்கலைப்புக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளும் அமைப்புகள் இரண்டு புகாரளித்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்