ஜேர்மனி ஏரியில் முதலைகள்: அதிகாரிகள் நடவடிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தெற்கு ஜேர்மனியில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் முதலைகளைக் கண்டதாக அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட சிலர் கூறியதன் பேரில் அந்த ஏரியின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஜேர்மனியிலுள்ள ஏரி ஒன்றில் சில சிறு முதலைகள் நீந்துவதாக அவ்வழியே சென்ற சிலர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதற்காக சென்ற ஒருவர், Baden-Württemberg மாகாணத்தின் Kirchheim நகரில் அமைந்துள்ள, Bürgersee ஏரியில் மூன்று சிறு முதலைகளைக் கண்டதாக பொலிசாருக்கு தகவலளித்தார்.

அதிகாரிகள் உடனடியாக ஏரியில் வலைவீசி தேடியும் முதலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த ஏரி மற்றும் அதன் அருகாமையிலுள்ள பகுதி ஆகியவற்றை மக்கள் பயன்படுத்த அதிகாரிகள் தடைவிதித்துள்ளதோடு, தேடுதல் வேட்டை தொடர்கிறது.

Bürgersee என்பது, நீந்தும் பகுதியுடன் கூடிய மூன்று சிறிய ஏரிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பூங்காவாகும்.

வரும் நாட்களில் அதிக வெயில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஏரிகளை நோக்கி நீந்துவதற்காக படையெடுக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்