ஜேர்மனியில் ஆண்கள் ஸ்பா நடத்திவந்த செல்வந்தருக்கு சிறை: எதற்காக தெரியுமா

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது என்பதைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த ஒரு நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தன்னை ஜேர்மனியின் பாலியல் தொழிலின் ராஜா என்று அழைத்து வந்த Jürgen Rudloff என்னும் நபர், ஏராளமான பாலியல் விடுதிகள் நடத்தி வந்தார்.

2002இலிருந்து ஜேர்மனியில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானதாக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான ஆண்கள் பாலியல் விடுதிகளை நாடுவதால் ஆண்டொன்றிற்கு 15 பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் கிடைக்கிறது.

பாலியல் தொழில் குற்றமாக கருதப்படும் பல்வேறு நாடுகளிலிருந்து ஆண்கள் ஜேர்மனியை நாடி வருகிறார்கள்.

இந்நிலையில் ஆண்களுக்கான ‘ஸ்பா’ என்ற பெயரில் பல பாலியல் விடுதிகளை ஏராளமாக உருவாக்கினார் Rudloff.

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் 2008இல் 6 மில்லியன் யூரோக்கள் செலவில் Stuttgart Paradise என்னும் பிரம்மாண்ட பாலியல் விடுதியை உருவாக்கினார் அவர். ஜேர்மனியைப் பொருத்தவரையில் இதுவரைக்கும் கூறப்பட்ட அனைத்துமே சட்டத்திற்குட்பட்டவைதான்.

ஆனால் Stuttgart Paradiseக்கு ஏராளமான மக்கள் வரத்துவங்க, வரும் ஆண்களின் தேவைகளை சந்திக்கும் அளவிற்கு அங்கு பெண்கள் இல்லை. அப்போது உதவிக்கு வந்தார்கள் Rudloffஇன் நண்பர்கள் சிலர்.

இதற்கிடையில் 2008ஆம் ஆண்டு பவேரியாவில் பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், பவேரிய கேங்கை சேர்ந்தவர்கள், மேற்கு ஐரோப்பாவிலிருந்து பெண்களை கடத்திக் கொண்டு வந்து Rudloffஇன் பாலியல் விடுதியில் தள்ளுவதாக தகவல்கள் கிடைத்தன.

ஜேர்மனியில் பாலியல் தொழில் குற்றம் இல்லை என்றாலும், பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்துவது குற்றமாகும்.

2013இல் இந்த குற்றத்தில் Rudloffக்கு பங்கிருப்பது தெரியவந்தது. 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி, 6 மணிக்கு, Rudloffக்கு சொந்தமான 70 இடங்களில் 1000 பொலிசார் அதிரடி சோதனை நிகழ்த்தினர்.

அதில் பலர் ஏராளமான பெண்களை கடத்திக் கொண்டு வந்து, Stuttgart Paradiseஇல் கொண்டு சேர்த்ததற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் 2017இல் Rudloff கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் பெண்களைக் கடத்திக் கொண்டு வரும் ஒரு நபர், அவர்களை எப்படியெல்லாம் அடித்து உதைத்து சித்திரவதை செய்து பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார்கள் என்பதைக் குறித்து விவரித்தபோதுதான், எவ்வளவு பெண்கள், எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்னும் உண்மை வெளியானது.

கைது செய்யப்பட்ட Rudloffக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பெரிய தொழிலதிபர் போல கோட் சூட் அணிந்து, தன்னை ஜேர்மனியின் பாலியல் தொழிலின் ராஜா என அழைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த Rudloffக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த தண்டனை, மற்ற பாலியல் விடுதிகள் நடத்துவோருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்