ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் இரண்டு போர் ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மசோவ் அருகே வடக்கு ஃப்ளீசென்சி பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு அவசர உதவி குழுவினர் விரைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய இரண்டு விமானங்களும் ஐரோப்பா போர் விமானங்கள் என தெரியவந்துள்ளது.

எனினும், ஒரு விமானத்தின் விமானி மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட விமானிக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. காணாமல் போன மற்றொரு விமானியை தேடும் பணி முடக்கிவிடப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது, விபத்து நடப்பதற்கு முன் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேறியுள்ளனர். காணாமல் போன இருவரில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers