ஜேர்மனியில் நவ-நாசிக்களை வெளியேற்ற பொலிசாருடன் பொதுமக்கள் இணைந்து செய்த செயல்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் neo-Nazi திருவிழாவை குலைக்கும் விதமாக, பொலிசாருடன் பொதுமக்களும் சேர்ந்து ஏராளமான பீர் போத்தல்களை பறிமுதல் செய்தனர்.

நாசிக்கள் கொண்டாடும் neo-Nazi திருவிழா ஜேர்மனியின் ஓஸ்ட்ரிட்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த திருவிழாவினால் வன்முறைகள் நிகழக்கூடாது என அனைத்து வகை ஆல்கஹாலையும் நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு ஆல்கஹால் குறைந்த பீர் மதுபான வகைகள் கிடைப்பதை தடுக்கும் வகையில், உள்ளூர்வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து மளிகைக் கடைகளில் பீர் வாங்கினர்.

இதனால், ஜேர்மனியில் நவ-நாசிக்கள் குழுவிற்கு இது ஒரு வறண்ட வார இறுதி நாட்களாக இருந்தது. பொலிசாரும் பொதுமக்களுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டதால், சுமார் 4,200 லிட்டர் அளவிலான பீர் பறிமுதல் செய்யப்பட்டது.

முடிவில் neo-Nazi திருவிழாவில் நாசிக்களை விட பொலிசார் தான் அதிக அளவில் இருந்தனர். அவர்கள் கேடயம் மற்றும் வாள் ஏந்தியிருந்தனர். அதாவது, இந்த விழாவில் 500 முதல் 600 பேர் வரையிலானவர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், ஆயிரத்து 400 பொலிசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

மேலும், நவ-நாசிக்களுக்கு எதிராக சுமார் 2,000 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers