நிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் சாலையில் நிர்வாணமாக பயணித்த ஒரு பயணியை பொலிசார் எச்சரித்த அதே நேரத்தில் பெண்கள் தங்களை எச்சரித்த பாதுகாவலர்களின் எச்சரிக்கையை மீறும் விதமாக மேலாடைகளை அகற்றிய சம்பவமும் ஜேர்மனியில் நடைபெற்றுள்ளது.

முனிச்சில் சில பெண்கள் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த பாதுகாவலர்கள், அவர்களை மேலாடை அணியும்படி வற்புறுத்தினார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக, அங்கிருந்த பெண்கள் அனைவருமே அந்த பெண்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் தங்கள் மேலாடைகள அகற்ற பாதுகாவலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையில் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் நிர்வாணமாக ஒருவர் பயணிப்பதைக் கண்ட பொலிசார் அதிர்ந்து போய் அவரை நிறுத்த, அவர் பதிலுக்கு ஒரு கேள்விதான் கேட்டார், உங்களுக்கு வெப்பமாக இல்லையா? என்பதுதான் அந்த கேள்வி...

முனிச் அதிகாரிகள் அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, பொது இடத்தில் எந்த அளவிற்கு நிர்வாணமாக செல்வதை அனுமதிக்கலாம் என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பவேரியாவின் CSU கட்சியினரோ, ஒருபடி மேலே போய், அவசர மசோதா ஒன்றை அறிமுகம் செய்து, குளிக்கும்போது அணியும் உடைகள் முழுமையாக மார்பகங்களையும் பாலுறுப்புகளையும் மறைக்க வேண்டும் என்னும் சட்டம் அமுலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.

இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான்...

ஐரோப்பாவில் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது...

இதற்கு காரணம், வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் வெப்பக்காற்று என்று கூறியுள்ள வானிலை ஆய்வாளர்கள், வெப்பம் 40 டிகிரி செல்ஷியசை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டும் என எச்சரித்துள்ளார்கள்.

ஜேர்மனியைப் பொருத்தவரை 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் வெப்பநிலை 38.5 டிகிரி செல்ஷியசை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்