ஜேர்மன் சேன்ஸலரின் உடல் நடுங்கியதை விமர்சித்த அரசியல்வாதி: மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் சேன்ஸலரின் உடல் நடுங்கியதை சீதோஷ்ண பிரச்சினையுடன் ஒப்பிட்டு பேசிய ஜேர்மனியின் கிரீன் கட்சியின் தலைவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் இரண்டு முக்கிய அரசு நிகழ்வுகளில் பங்கேற்றபோது அவரது உடல் கடுமையாக நடுங்கியது.

ஆனால் அது குறித்துக் கேட்ட போதெல்லாம், அது வெறும் நீரிழப்பால் ஏற்பட்டது என்று கூறிய ஏஞ்சலா, தண்ணீர் குடித்தால் அது சரியாகி விடும் என்றும் கூறிவிட்டார்.

இத்தனை பிரச்சினைக்கு மத்தியிலும் ஜப்பானுக்கு பறந்த ஏஞ்சலா, G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு கடமையாற்ற சற்றும் தவறவில்லை.

ஆனால், ஜேர்மனியில் கிரீன் கட்சி தலைவர்களில் ஒருவரான Annalena Baerbock, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின்போது சீதோஷ்ண பாதுகாப்பு குறித்த தங்களதுதிட்டத்தை விளக்கும் நேரத்தில், நாட்டில் நிலவும் அதீத வெப்பத்தைப் பொருத்தவரையில், இந்த கோடை உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நமது சேன்ஸலரைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம் என்றார்.

பின்னர் ஈராக் சென்றிருந்த Annalena, அங்கு பேசும்போதும், இப்படி ஒரு வெயிலில் ஒரு மணி நேரம் நிற்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு நடுக்கம்தான் ஏற்படும், அதற்கு சேன்ஸலரும் விதிவிலக்கல்ல என்றார்.

ஜேர்மன் அரசியல்வாதிகள் அனைவருமே ஏஞ்சலா நடுங்கியதைக் குறித்தோ, அதற்கான காரணம் குறித்தோ பேசாமல் இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்திய நேரத்தில், Annalena மட்டும் அவரை விமர்சித்திருந்தார்.

ஆனால் என்ன நடந்ததோ தெரியாது, Annalena, ட்விட்டரில் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது ஒரு தவறான அறிக்கை என்று கூறியுள்ள Annalena, நான் சேன்ஸலரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன், யோசிக்காமல் தொடர்பில்லாத இரண்டு விடயங்களை இணைத்து பேசி விட்டேன்.

ஒரு பத்திரிகையாளர் என்னிடம், சேன்ஸலரின் உடல் நிலைதான் தேர்தல்கள் விரைவில் வரக் காரணமா என்று கேட்டதற்கு பதிலளிக்கும் வகையில், இல்லை, வெப்பம்தான் காரணம் என்று தெளிவாக கூறுவதற்கு பதிலாக, இப்படி கூறிவிட்டேன், அது தவறாகிவிட்டது என்றார் Annalena.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்