இரண்டாம் உலகப்போரின்போது இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம்.. திருப்பி தரும் ஜேர்மனி!

Report Print Kabilan in ஜேர்மனி

இத்தாலி நாட்டில் 2ஆம் உலகப்போரின் போது திருடப்பட்ட ஓவியத்தை ஜேர்மனி திருப்பி தர உள்ளது.

கடந்த 1824ஆம் ஆண்டு டச்சு கலைஞரான ஜான் வான் ஹுய்சூம் என்பவர், பூந்தொட்டி ஓவியம் ஒன்றை வரைந்தார். இது உலகப் புகழ் பெற்ற, விலை மதிப்பில்லாத ஓவியம் ஆகும்.

இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் உள்ள உப்சி அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஆனால், இரண்டாம் உலகப்போரின் போது இத்தாலியில் ஊடுருவிய ஜேர்மனியைச் சேர்ந்த நாசிக்கள், 1943ஆம் ஆண்டு ஜான் வான் ஹுய்சூமின் பூந்தொட்டி ஓவியத்தை திருடிச் சென்றனர்.

ஜேர்மனியின் மறு ஒருங்கிணைப்புக்கு பிறகு கூட அந்த ஓவியம் நீண்டகாலம் மீண்டும் வெளிவராமல் இருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் உப்சி அருங்காட்சியக இயக்குனர், ஜேர்மனியில் உள்ள அந்த பூந்தொட்டி ஓவியத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என முறையிட்டார்.

இதற்கு ஜேர்மனி அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜேர்மனி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் விரைவில் இத்தாலி செல்கிறார். அப்போது அவர் உப்சி அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று பூந்தொட்டி ஓவியத்தை ஒப்படைப்பார்‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...